3 திருத்த சட்டங்களை எதிர்த்தும், பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த கோரியும் வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம் – மறியல்.
3 திருத்த சட்டங்களை எதிர்த்தும், பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த கோரியும் வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம் – மறியல்.
திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக 3 திருத்த சட்டங்களை எதிர்த்தும் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த கோரியும் இன்று திருச்சி மாவட்ட கோர்ட்டு நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கம், ஜாக் அமைப்பு ஆகியவை இணைந்து நடத்தியது. இந்த போராட்டம் ஜாக் அமைப்பின் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க தலைவர் பாலசுப்பிர மணியன், செயலாளர் சுகுமார், துணைத்தலைவர் மதியழகன், இணைச் செயலாளர்கள் அப்துல் கலாம், சந்தோஷ் குமார், செயற்குழு உறுப்பினர்கள் சுதர்சன், சரவணன், முத்து மாரி, வழக்கறிஞர்கள் ஆதிநாராயணன், தாஜுதீன், தியாகராஜன், ராஜன், ராமச்சந்திரன், ராஜேந்திரன், சந்துரு, ரேவதி, ஜீவா, புவனேஸ்வரன், ஜெயராமன், குற்றவியல் வழக்கறிஞர் சங்க தலைவர் முல்லை பி. சுரேஷ், செயலாளர் பி.வி. வெங்கட், வரகனேரி சசிகுமார், உள்பட ஏராளமான வழக்கறிஞர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர் .
அப்போது வழக்கறிஞர்கள் ரோட்டில் சாலை மறியல் செய்து பிறகு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.