கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று திமுக அமைச்சர் பதவி விலக வேண்டும் திருச்சி கலெக்டரிடம் தேமுதிகவினர் மனு.
கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று
திமுக அமைச்சர் பதவி விலக வேண்டும்
திருச்சி கலெக்டரிடம் தேமுதிகவினர் மனு.
திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிக செயலாளர் டி.வி.கணேஷ், திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் சன்னாசிப்பட்டி ஆர்.பாரதிதாசன் ஆகியோர் தலைமையில் தேமுதிகவினர் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து இன்று மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கில் மது விற்பனை, கஞ்சா, கள்ளச்சாராயம் விற்பனையை தமிழக அரசு உடனடியாக தடுத்திட வேண்டும். மாவட்ட கலெக்டரும் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளச்சாராய சாவு சம்பவத்திற்கு பொறுப்பேற்று மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி பதவி விலக வேண்டும். கள்ளச்சாராய சாவுக்கு திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும். கள்ளச்சாராய வழக்கை சிபிஐ விசாரணைக்கு உடனடியாக மாற்ற தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும் .தமிழகத்தில் நடக்கும் அனைத்து சாராய ஆலைகளையும் மூடுவதற்கு மாவட்ட கலெக்டர்கள் உடனடியாக உத்தரவிட வேண்டும் .
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் திருச்சி மாநகர் மாவட்ட அவைத் தலைவர் வி.கே .ஜெயராமன்,மாவட்ட துணை செயலாளர் பிரீத்தா விஜய் ஆனந்த்,செயற்குழு உறுப்பினர் கலைப்புலி பாண்டி. பொதுக்குழு உறுப்பினர் விஜய சுரேஷ், நிர்வாகிகள் பெருமாள், கார்த்திக், தமிழ்செல்வம், வைத்தியநாதன், கொட்டப்பட்டு கோபால கிருஷ்ணன், கேபிள் ஆபிரகாம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.