திருச்சி கபூர் பள்ளிவாசல் ஈத்கா பள்ளி மைதானத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை. பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு .
உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகையான பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது
திருச்சி இஸ்லாமியர்கள் உற்சாகமாக கொண்டாட்டம் – ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி அன்பை பரிமாறி கொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் புனித பக்ரீத் பண்டிகையை தியாகத் திருநாள் என அழைக்கின்றனர் .
இந்த ஆண்டு தியாகத் திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை இன்று அதிகாலையில் இஸ்லாமியர்கள் சிறப்பு பக்ரீத் தொழுகையில் பங்கேற்றனர். அந்த வகையில் திருச்சி மாரிஸ் பாலம் அருகே உள்ள கபூர் பள்ளிவாசல் ஈத் கா பள்ளி மைதானத்தில் அப்துல் ஹமீத் தலைமையில் ஹாஜி மொய்தீன் அஷ்ரத் முன்னிலையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர் இணைந்து தொழுகையில் ஈடுபட்டனர்.
புத்தாடைகள் அணிந்து
சிறப்பு தொழுகையை தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி அன்பை பரிமாறி கொண்டு மகிழ்ந்தனர். பின்னர் கீழே பொதுமக்களுக்கு குர்பானி வழங்கினர் .