Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் யானையை குளுமையுடன் வைத்திருக்க ஷவர் அமைப்பு

0

 

திருச்சி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் எம்.ஆர் பாளையம் காப்பு காட்டில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் தமிழகத்தில் சட்ட விரோதமாக உரிமம் பெறாமல் வைத்திருந்த தனியார் யானைகளும், மற்றும் உரிய பராமரிப்பு இல்லாத கோயில் யானைகளும் உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு வரப்பட்டு வனஉயிரின மற்றும் பூங்கா சரகத்தின் கீழ் 2019ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

தற்போது யானைகள் மறுவாழ்வு மையத்தில் 10 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்து,சந்தியா,ஜெயந்திமல்லாச்சி,கோமதி,ஜமிலா,இந்திரா,சுமதி,கிரதி, சுந்தரி உள்ளிட்ட பத்து யானைகள் பராமரிப்பதற்கு யானைக்கு இரண்டு பேர் (மாவுத் காவடி) வீதம் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேற்பார்வை இடுவதற்கு யானைகளின் பராமரிப்பை கண்காணிப்பதற்கும் தமிழ்நாடு வனத்துறை சார்பாக ஒரு வனச்சரக அலுவலர், ஒரு வனவர், நான்கு வனக்காப்பாளர், இரண்டு வனக்காவலர் பணியமர்த்தப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். மேலும் கூடுதலாக பணிகளை மேற்பார்வை செய்வதற்காக திருச்சி வனக்கோட்ட வனவர்கள் தினந்தோறும் சுழற்சி முறையில் சிறப்பு பணி பார்த்து வருகின்றனர்.

காலை நீச்சல் மற்றும் குளியல் குளம், சேற்றுக்குளியல் ஆகியவற்றில் யானைகள் குளிப்பாட்டப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது.வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் யானைகளை குளுமையுடன் வைத்திருக்க ஷவர் போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. யானைகள் சந்தோசமாக அதில் வந்து குஷியுடன் குளியல் போட்டு வருகின்றன. மாலை குளியல் நீர் தெளிப்பான் (Bath shower) மூலம் சிறு குளியல் ஷவர் அளிக்கப்படுகிறது. குடிநீர் வசதிக்காக ஆங்காங்கே குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.