அரசு பெண்கள் பள்ளிகளில் சுகாதார வளாகங்கள் கட்டித் தருவதற்காக நிதி திரட்டும் வகையில் திருச்சியில் சுழற்சங்கத்தின் கண்காட்சி நேற்று தொடங்கியது.
சுழற்சங்கத்தின் இன்டா்நேஷனல் மாவட்டம் 3000, திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி பட்டா்பிளைஸ் சுழற் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் ‘ரோட்டோ எக்ஸ்போ 2024’ என்ற இக்கண்காட்சியை தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு தொடக்கிவைத்தாா்.
மேலும், தமிழ்நாடு அனைத்து வணிகா் சங்கங்களின் பேரமைப்பு பொதுச்செயலாளா் கோவிந்தராஜுலு, ஸ்வேதா மருத்துவமனை இயக்குநா் செந்தூரன், சுழற்சங்கத்தின் இன்டா்நேஷனல் மாவட்டம் 3000-த்தின் 2024-25 ஆம் ஆண்டுக்கான ஊடகத் தொடா்பு அலுவலா் கே. சீனிவாசன், மேயா் மு. அன்பழகன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.
முன்னதாக மாவட்ட ஆளுநா் ஆனந்த ஜோதி, ஜோசப் கண் மருத்துவமனை இயக்குநா் பிரதீபா, ரோட்டரி சங்க ஆளுநா் தோ்வு ராஜா கோவிந்தசாமி, சங்கத்தின் வருங்கால ஆளுநா்கள் காா்த்திக், ஆா்.பி.எஸ். மணி, மாவட்ட செயலாளா் ( கம்யூனிட்டி சா்வீஸ்) மின்னல் சரவணன், லயன் எஸ்.பி. சுப்பிரமணியன், லிம்ராஸ் அகாடமி ரொட்டேரியன் பா்சானா ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனா்.
நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளா் (குட்வில் மிஷன்) ராமச்சந்திர பாபு, மண்டல ஒருங்கிணைப்பாளா் கேசவன், மாவட்ட செயலாளா் (கிளப் நிா்வாகம்) முகமது தாஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த கண்காட்சி வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை என மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைந்துள்ள இக்கண்காட்சியில் ஜவுளி, கட்டுமானப் பொருள்கள், கைவினைப்பொருள்கள், பேன்சி ரகங்கள், பொம்மைகள், அழகு சாதனப் பொருள்கள் உள்ளிட்டவை விற்பனைக்கும், காட்சிக்கும் இடம்பெற்றுள்ளன.
கண்காட்சி ஏற்பாடுகளை, பட்டா் பிளைஸ் ரோட்டரி சங்கத்தின் தலைவா் சுபா பிரபு, செயலாளா் பராசக்தி ஆகியோா் செய்துள்ளனா்.