முல்லைப் பெரியாறு விவகாரம். நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழக அரசு வழிநடத்த வேண்டும் திருச்சியில் ஓபிஎஸ் பேட்டி .
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை பெற்று தந்தவர் ஜெயலலிதா என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1349 -வது சதய விழாவை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது உருவ சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சரும், அமைப்புச் செயலாளருமான வெல்லமண்டி நடராஜன்,மாவட்டச் செயலாளர்கள் ராஜ்மோகன், ரத்தினவேல், சாமிக்கண்ணு, அவைத்தலைவர் வக்கீல் ராஜகுமார், திருச்சி மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
பின்னர் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றம் மூலம்
அணையில் நீர்த்தேக்க அளவு
பெற்றுத் தந்துள்ளார். முல்லைப் பெரியாறு அணை , அமராவதி உபரி நீர் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை உள்ளடக்கியது என்றார்.
பின்னர் மத்திய அரசுடன் கூட்டணியில் உள்ளீர்கள்? முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக வலியுறுத்துவீர்களா? என்ற கேள்விக்கு மத்திய அரசும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புப்படி வழி நடத்தும். தமிழக அரசும் அதனை வழிநடத்த வேண்டும் என பதிலளித்தார்.