Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அருகே ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த என்ஜினீயர் தவறி விழுந்து சாவு.

0

 

ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த என்ஜினீயர் தவறி விழுந்து சாவு.

காஞ்சிபுரம் மாவட்டம் மடிப்பாக்கம் பெரியார் நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் முருகன் (வயது 43). இவர் சென்னையில் உள்ள செல்போன் நிறுவனத்தில் மென்பொருள் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். முருகனின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் ஆகும். கோவில் கொடைவிழாவில் கலந்து கொள்ள தனது மனைவி ஜோதிமணி மற்றும் குழந்தைகளுடன் எட்டையபுரத்துக்கு முருகன் வந்திருந்தார்.

இந்தநிலையில் அவசர வேலையாக நேற்று அவர் அலுவலகத்துக்கு செல்ல வேண்டி இருந்தது. இதனால் தனது மனைவி மற்றும் குழந்தைகளை மாமியார் வீட்டில் விட்டுவிட்டு, நேற்று முன்தினம் மாலை நெல்லைக்கு வந்தார்.பின்னர், அங்கிருந்து, முன்பதிவு இல்லாத டிக்கெட்டை எடுத்து, நாகர்கோவில்- தாம்பரம் சிறப்பு ரெயிலில் ஏறினார்.

முன்பதிவு இல்லாத பெட்டியில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவர் படியில் உட்கார்ந்து பயணம் செய்துள்ளார் ரெயில் திருச்சி மாவட்டம் மணப்பாறையை கடந்து வந்து கொண்டிருந்த போது அவர் படியில் இருந்து கீழே தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி, சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி, போலீஸ் ஏட்டு சபின் மல்லிகா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.