Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் முன்னாள் அதிமுக கவுன்சிலரின் கணவர் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்.4 பேர் கைது. 20 பேரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் .

0

 

திருச்சியில் அதிமுக முன்னாள் கவுன்சிலரின் கணவர் மீது கொடூர தாக்குதல்.

திருச்சி பெரிய பஜார் காசியா பிள்ளை சந்து கள்ளர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45). முன்னாள் அதிமுக கவுன்சிலரின் கணவரான இவர் அந்தப் பகுதியில் நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.

இவர் அந்தப் பகுதி மாநகராட்சி பூங்காவில் கஞ்சா அடிக்கும் சமூக விரோத கும்பல் குறித்து போலீசில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அவர்
காசியா பிள்ளை சந்து பகுதியில் சென்றபோது மர்மகும்பல் அவரை வழிமறித்தது.
பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் போலீசில் எதற்காக எங்கள் மீது தவறான புகார் அளித்தீர்கள் என கேட்டு தகராறு செய்தனர். பின்னர் மரக்கட்டை மற்றும் கல்லால் அவரை தாக்கினர். இதை தட்டி கேட்டு அவரது உறவினர் சீனிவாசன் என்பவரையும் அந்த கும்பல் தாக்கிவிட்டு தப்பி சென்றது. இதில் இரண்டு பேரும் காயமடைந்தனர்.

இது குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து திருச்சி கள்ளதெருவை சேர்ந்த நடராஜன் (வயது 21), திருச்சி சாம்பிராணி தெரு சுகுமார் (19), உறையூர் நவாப் தோட்டம் சேரன் (21), அரியமங்கலம் கோபாலக்குறிச்சி சரவணன் (19 )ஆகிய 4 வாலிபர்களை கைது செய்தனர்.

இந்த நிலையில் இன்று கள்ளர் தெருவை பெண்கள் மற்றும் பொதுமக்கள் பெரிய கடைவீதியில் செல்வராஜ் மீது தாக்குதல் நடத்திய 20க்கும் மேற்பட்ட வரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் செய்ய முயற்சி செய்தனர். இது பற்றி தகவல் அறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.மறியலை கைவிட்டு அவர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பெண்கள் கூறும் போது,
மாநகராட்சி பூங்காவில் தினமும் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வரும் கஞ்சா போதை கும்பல் முகாமிடுகிறது.
பூங்கா பூட்டப்பட்டாலும் சுவர் ஏறி குறித்து உள்ளே சென்று மது அருந்தி கஞ்சா புகைக்கிறார்கள்.
ஆகவே கஞ்சா அடிப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


செல்வராஜ் மீது தாக்குதல் நடத்திய 20க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அப்போது பேச்சுவார்த்தை நடத்திய கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் பெரிய கடை வீதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.