பிரபல ரவுடியை என்கவுண்டர் செய்யப்பட உள்ளதாக கலெக்டர் இல்லத்தை உறவினர்கள் முற்றுகையிட்ட நிலையில் இன்று திருச்சி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார் .
திருச்சி வாலிபரை என்கவுண்டர் செய்ய போலீசார் திட்டமிடுவதாக கூறி திருச்சி மாவட்ட ஆட்சியர் பங்களா முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் ரவுடி கோப்பு நாகராஜன் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்டார்.
திருச்சி மாவட்டம், கோப்பு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன்.
இவர் மீது ஜீயபுரம் காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில்
உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிலர் துவரங்குறிச்சி பகுதியில் இருந்து அழைத்து சென்றதாக கூறப்படுகிறது .
அதன் பிறகு நாகராஜன் மீண்டும் வீடு திரும்பவில்லை.
நாகராஜனை அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களிலும் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர்.
ஆனால் அங்கு போலீசார் புகாரை பெற மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து
நேற்று இரவு நாகராஜ் மனைவி பிரேமா மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கோப்பு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திருச்சி காஜாமலை ரோட்டில் உள்ள மாவட்ட ஆட்சியர் இல்லத்திற்கு முன் திரண்டு வந்து நாகராஜை போலீசார் அழைத்துச் சென்று என்கவுண்டர் செய்ய திட்டமிடுவதாகவும் அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர் இதை அடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஏ டி எஸ் பி கோடிலிங்கம் தலைமையிலான போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் நாகராஜன் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்ததாக அவரை
கைது செய்த ஜீயபுரம் போலீசார்,
நாகராஜனை குற்றவியல் நீதிமன்றம் எண் மூன்றில் ஆஜர்படுத்தினர்.
நாகராஜன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.
ஆனால் அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த தவறும் செய்யாமல் திருந்தி வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.