லால்குடி அம்மன் கோவிலில் நகைகள் திருட்டு .
2 உண்டியல்களையும் எடுத்துச்சென்றனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நன்னிமங்கலத்தில் சர்வ சக்தி மங்கள மகா காளியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் தினந்தோறும் அப்பகுதி மக்கள் வந்து வழிபடுவது வழக்கம். நேற்று வழக்கம்போல் பூஜையை முடித்துவிட்டு கோவில் பூசாரி தட்சிணாமூர்த்தி வீட்டுக்கு சென்று விட்டார். இன்று காலையில் வந்து பார்த்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்றபோது இரண்டு உண்டியல்களையும் உடைத்து மர்ம நபர்கள் பணத்தை அள்ளிச் சென்றுள்ளனர். மேலும் பீரோவில் இருந்த 6கிராம் தாலி, பொட்டு, வெள்ளி பொருட்கள் ஆகியவையும் திருட்டு போயிருந்தது .
மேலும் அம்மனுக்கு சாத்தப்பட்டிருந்த மற்றும் சாத்த உள்ள பழைய புதிய பட்டுப் புடவைகள், கோவில் சாமான்களும் திருட்டு போயிருந்தன.
இதுகுறித்து கோவில் பூசாரி தட்சிணாமூர்த்தி லால்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.