தமிழகத்தில் ஓர் இடத்தில் வெற்றி பெற்றால் கூட பாஜகவுக்கு வெற்றி தான் . திருச்சியில் செய்தி தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கர்னேஷ் பேட்டி.

திருச்சியில் பாஜக செய்தி தொடர்பாளர் பேட்டி:
பாஜக மாநில திரித்து பேசப்படுகிறது தலைவர் அண்ணாமலையின் தனி செயலாளரும், பாஜக செய்தி தொடர்பாளருமான ஸ்ரீகாந்த் கர்னேஷ் திருச்சி பாஜக அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மோடி பிரச்சாரத்தில் பேசிய பேச்சை தமிழ்நாட்டில் தவறாக திரித்து பரப்பு கின்றனர்
இஸ்லாமியர்களுக்கும், பெண்களுக்கும் எதிராக பாஜக உள்ளது போன்ற தோற்றத்தை இந்தியா கூட்டணியினர் உண்டாக்குகின்றனர்.
இந்தியாவில் வம்சாவளியாக வாழுகின்ற சிறுபான்மையினரை அவர் குறிப்பிடவில்லை
வெளியில் இருந்து ஆதாரம் இன்றி குடியேறி உள்ளவர்களையே வந்தேரி என்று குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து மேற்கு வங்கம் மூலமாக இந்தியாவில் நுழைகின்றார்கள். அவருடைய மக்கள் பெருக்கம் அதிக அளவில் வருகின்றனர். ஆவணங்கள் இல்லாமல் ஆதார் அட்டை வாங்கி விடுகின்றனர் இதைத்தான் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் பூஜ்ஜியத்தில் இருந்து ராஜ்ஜியம் அமைப்போம் என்று கூறினோம். ஒரு இடத்தில் வெற்றி பெற்றால் கூட பாஜகவுக்கு வெற்றி தான்.எங்களுக்கு தமிழக மக்களின் யோகோபித்த ஆதரவுடன் அதிக வாக்கு சதவீதத்தை பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட தலைவர் ராஜசேகரன் ,மாநில நிர்வாகி புரட்சி கவிதாசன்,ஊடகப்பிரிவு முரளி,வாசன் வேலி சிவக்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

