Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் அதிமுக, அமமுக உள்ளிட்ட வேட்பாளர்களின்மனுக்கள் ஏற்பு 30ந்தேதி இறுதி பட்டியல் வெளியீடு .

0

'- Advertisement -

அதிமுக, அ.ம.மு.க, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு.

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மொத் தம் 48 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 30-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக் களை சுடந்த 20-ந் தேதி முதல் அந்தந்த தொகுதியில் உள்ள மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் மனு தாக்கல் செய்தனர். 27-ந் தேதி பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனுவுக்கான காலக்கெடு நிறைவடைந்தது.

இந்நிலையில் இதுவரை திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 48 வேட்பு மனுக்கள் பெறப் பட்டுள்ளது. அதில் நேற்று மட்டும் 29 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. ஒரே வேட்பாளர் இரண்டு வேட்புமனுக்களும் மாற்று வேட்பாளர் மனுவும் வழங்கியுள்ளனர். பெறப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.

இதில் அதிமுக வேட்பாளர் கருப்பையா, அ.ம.மு.க.வேட்பாளர் செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜேஷ் ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. தொடர்ந்து மனுக்கள் பரிசீலினை நடந்து.

வருகிற 30-ந்தேதி வரை மனுக்களை வாபஸ் பெறலாம்.

30-ந் தேதி மாலை 3 மணிக்கு பிறகு இறுதிப்பட்டியல் வெளியாகிறது

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.