தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்த பின் வேட்பு மனு தாக்கல் செய்தார் திருச்சி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் செந்தில்நாதன் .
தேசிய ஜனநாயக கூட்டணியில், திருச்சி நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ப.செந்தில்நாதன் இன்று திருச்சியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் . அவருடன் முன்னாள் மேயர் சாருபாலா , பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகர், தொட்டியம் ராஜசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்
தேர்தலில் போட்டியிடுவதற்கு முறைப்படி,
தான் வகித்து வந்த மாமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையர் முன்னிலையில் மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் வழங்கினார்.