Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா வேட்பு மனு தாக்கல்

0

'- Advertisement -

 

திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா தனது வேட்பு மனுவை திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். (தாக்கல் செய்தார்)

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், அதிமுக வெற்றி வேட்பாளராக புதுக்கோட்டையைச் சேர்ந்த கருப்பையா போட்டியிடுகின்றார்.

அவர், தனது வேட்பு மனுவை திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரிடம் வழங்கினார்.

அப்போது, புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், திருச்சி மாவட்ட செயலாளர்கள் ப.குமார், சீனிவாசன், அமைப்புச் செயலாளர் வளர்மதி ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக, திருச்சி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் கருப்பையா, நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, அதிமுகவினர் புடை சூழ, உற்சாக வெள்ளத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இதில், திருச்சி மாவட்ட செயலாளர்கள் ப.குமார், ஜெ.சீனிவாசன், கழக அமைப்பு செயலாளர் புதுக்கோட்டை மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், கழக அமைப்பு செயலாளர்கள் எஸ்.வளர்மதி, டி.ரத்தினவேல், ஆர்.மனோகரன், அம்மா பேரவை மாநில துணை செயலாளர் சி.அரவிந்தன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சி.கார்த்திகேயன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் ஜெ.இப்ராம்ஷா, திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் எஸ் கே டி கார்த்தி ,சிறுபான்மையினர் நல பிரிவு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.புல்லட் ஜான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.