ஜுன் 4ல் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடப்பதால் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் 10ஆம் தேதி வரை பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டமாக ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் கோடை வெப்பமும் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.