நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பெட்ரோலியம் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “பெட்ரோல், டீசல் விலையை ரூ.2 குறைத்ததன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி இந்திய குடும்பங்களின் நலன் மற்றும் வசதி ஆகியவை தனது இலக்கு என்பதை மற்றொறு முறை நிரூபித்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
இன்று காலை முதல் இந்த விலைக்குறைப்பு நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் சமையல் எரிவாயுவின் விலை ரூ.100 குறைக்கப்பட்டது.
இவையெல்லாம் நாடு எதிர்கொள்ளவுள்ள மக்களவை தேர்தலையொட்டிய நடவடிக்கைகளென விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இருந்தாலும் 666 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது .
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.62 விற்கப்பட்ட நிலையில் ரூபாய் 100 ஆக குறைக்கப்பட்டுள்ளது
ரூ.94.24 விற்கப்பட்ட டீசல் ரூ.92.34 காசுகளாக குறைக்கப்பட்டு உள்ளது
இந்த புதிய விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது .