Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சுப்ரமணியபுரத்தில் நேற்று பொது சொத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சி முன் தள்ளு வண்டி வியாபாரிகள் ஒப்பாரி போராட்டம் .

0

 

திருச்சி மாநகராட்சி முன்பு
தள்ளுவண்டி வியாபாரிகள் ஒப்பாரி போராட்டம்.

திருச்சி மாநகர் டி.வி.எஸ். டோல்கேட், சுப்ரமணியபுரம் பகுதிகளில் பல ஆண்டு காலம் சாலையோரத்தில் பூ பழம், காய்கறி உள்ளிட பொருட்களை தள்ளுவண்டிகளில் வைத்து வியாபாரம் செய்து வந்தவர்களை மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, காவல் துறை சார்பில் தள்ளுவண்டிகடைகள் அகற்றப்பட்டதை கண்டித்தும், திருச்சி தெப்பக்குளம் , மத்திய , சத்திரம் பேரூந்து நிலையம் , உள்ளிட்ட பல பகுதிகளில் அடையாள அட்டை வழங்கி தேர்தல் நடத்தி விற்பனைக்குழு அமைக்காமல் சாலையோர வியாபாரிகள் கடைகளை அப்புறபடுத்தக்கூடாது என மதுரை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர தடையாணைகள் இருக்கும் நிலையில் இது போன்று சட்டத்தை மீறி நீதிமன்ற உத்திரவை மீறி மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை , காவல் துறையினர் தெருவோர வியாபாரத்தை நடத்த விடாமல் செய்வதை கண்டித்தும், சுப்ரமணியபுரத்தில் நேற்று நடந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உயர்நீதிமன்ற உத்திரவை மீறுதல் ,பொது சொத்தை சேதபடுத்துதல்,
வியாபாரிகளை தாக்கி காயபடுத்துதல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும், தமிழக அரசுஉரிய இழப்பீடு வழங்க வேண்டும், தொடர்ந்து வியாபாரம் செய்ய அனுமதிப்பது என்ற கோரிக்கைகளை முன்வைத்து இன்று திருச்சி மாநகராட்சி முன்பு
பாதிக்கப்பட்ட வியாபாரிகளோடு சேர்ந்து ” ஒப்பாரி வைக்கும் போராட்டம்” நடைப்பெற்றது.

போராட்டத்திற்கு பொன்மலை பகுதி செயலாளர் விஜேந்திரன் தலைமை தாங்கினார்.

போராட்டத்தை விளக்கி சிபிஎம் மாநகர் மாவட்ட செயலாளர் , மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெற்றிச்செல்வன், கார்த்திகேயன், லெனின், மணிமாறன், தரக்கடை சங்க மாவட்ட செயலாளர் செல்வி, மாவட்ட தலைவர் கணேசன் ஆகியோர் பேசினர்.

இந்த போராட்டத்தில் திரளான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.