Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நவல்பட்டில் ஐடி பார்க் ok. சாலை, மின் கம்பங்கள் ? திருச்சி கலெக்டரிடம் சமூக ஆர்வலர் மனு .

0

'- Advertisement -

சமூக ஆர்வலர் திருவேங்கடம் என்பவர் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது :

நவல்பட்டு ஐடி பார்க் திருச்சிக்கு கிடைத்த பொக்கிஷம், தமிழக. முதல்வருக்கு நன்றி
திருச்சி நவல்பட்டுவில் உள்ள தொழில்நுட்ப பூங்காவை வளர்ச்சியை அடைய செய்ய வேண்டும்.

ஐடி பார்க் சாலையில் போதிய விளக்குகள், 100 அடி ஐடி பார்க் சாலையை அழகாக பராமரிக்க வேண்டும்.

திருச்சியில் புதிய ஐ.டி பார்க் திறப்பு; 2800 பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு என்ற செய்தி தமிழக முதல்வர் அவர்களால் கிடைக்கப் பெற்றது மிக்க மகிழ்ச்சி .
மேலும் ஏற்கனவே பல நிறுவனங்கள் இப்பகுதியில் இருக்கின்றன. ஆயிரக்கணக்கானவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

தகவல் தொழில்நுட்பப் பூங்காவிலும் ஆயிரம் கணக்கானவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஏராளமான நிறுவனங்கள் வர இருக்கின்றன.

உடனடியாக 100 அடி ரோட்டில் போதிய விளக்குகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அந்த சாலை தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு செல்லும் சாலை என்பதால் பொதுமக்களுக்கும் ஊழியர்களுக்கும் பாதுகாப்பாகவும் அழகாகவும் பராமரிக்க வேண்டும்.

 

இந்த நிலையில்
புதுக்கோட்டை மெயின் ரோட்டில் இருந்து ஐடி பார்க் செல்லும் 100 அடி ரோடு என்று

சொல்லும் சாலை

( சாலையின் ஆரம்பப் படம்)

இரவு நேரத்தில் செல்வதற்கு மின்விளக்குகள் இல்லாமல் சிரமமாக இருக்கிறது சாலை ஓரத்தில் விளக்குகள் முழுமையாக இல்லாததால்
நடுவில் இருக்கும் தடுப்புச் சுவரில் செடிகள் முளைத்திருப்பதால்
வாகன ஓட்டிகள் செல்வதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது.

 

எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உடனடியாக 100 அடி ரோட்டில் மின் கம்பங்கள் அமைத்து விளக்குகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி உள்ளார்.

 

இது அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.