மணப்பாறையை அடுத்த மணப்பாறைப்பட்டி மணிகண்டன் நகரைச் சோந்த மோகன்ராஜ் மகன் அஸ்வின்சா்மா (வயது18). இவா், திருச்சியில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வந்தாா்.
இவா் நேற்று திங்கள்கிழமை வழக்கம்போல மணப்பாறையிலிருந்து ரயிலில் திருச்சி வந்து கொண்டு இருந்தார், பெரிய ஆலம்பட்டி பகுதியில் வந்தபோது கதவின் அருகே நின்ற அஸ்வின்சா்மா தவறி கீழே விழுந்தாா்.
இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டு காயமடைந்த அஸ்வின்சா்மாவை அருகில் இருந்தவா்கள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அஸ்வின்சா்மா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து திருச்சி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.