Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஹெல்மெட் அணிந்தாலும் இனி ரூ.2000 அபராதம்.புதிய மோட்டார் வாகன சட்டம் வருகிறது

0

'- Advertisement -

 

தமிழகத்தில் சாலை விபத்துக்கள் மூலமாக உயிரிழப்புக்கள் மற்றும் பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

எனவே சாலை விபத்துகளை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு போக்குவரத்து துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஹெல்மெட் அணியாமல் வாகனங்கள் ஓட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் தற்போது ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டினாலும் 2000 விதிக்கப்படும் என்று புதிய விதியை போக்குவரத்து துறை அறிமுகப்படுத்துகிறது.

அதாவது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் இருசக்கர வாகனங்களை ஓட்டுநர்கள் ஹெல்மெட் அணிந்து அதன் ஸ்ட்ரீப் அணியாமல் சென்றால் ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். மேலும் ஓட்டுநர்கள் பிஐஎஸ் அங்கீகாரம் இல்லாத அல்லது குறைபாடுகளுடன் உள்ள ஹெல்மெட்டுகள் அணிந்தால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்த அபராதங்கள் விதிக்கப்படுவதன் நோக்கம் இரண்டு சக்கர வாகனங்கள் விபத்திற்கு உள்ளாகும் பொழுது ஓட்டுனர்கள் தரமான ஹெல்மெட் அணிந்திருந்தால் ஏற்படும் பாதிப்புகள் குறையும் என்பதால் தான் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.