திருச்சி விமான நிலையத்தில் பசை வடிவில் வயிற்றுக்குள் வைத்து கடத்தி வந்த ஒரு கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் .
அரபு நாட்டிலிருந்து கடத்திவரப்பட்ட ஒரு கிலோ தங்கம் :
திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் .
அரபு நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கம் திருச்சி விமான நிலையத்தில் நேற்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அரபு நாடுகளில் ஒன்றான
சார்ஜாவிலிருந்து புறப்பட்ட ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் வியாழக்கிழமை நள்ளிரவு திருச்சி வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவினர் வழக்கமான சோதனைகளுக்கு உள்ளாக்கினார்.
இதில் ஆண் பயணி ஒருவர் உடலுக்குள் (அடிவயிற்றில்) மறைத்து பசை வடிவிலான தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து, அவர் வயிற்றில் இருந்த தங்கம்
மருத்துவ சிகிச்சை மூலம்
வெளியே எடுக்கப்பட்டது.
அது 1கிலோ 61 கிராம் எடை இருந்தது . அதன் மதிப்பு ரூ.66.68 லட்சம்.
பின்னர் தங்கத்தை பறிமுதல் செய்து அந்த பயணியையும் கைது செய்து சுங்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.