திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் செல்போன் திருடிய 2 பேர் கைது. வீட்டில் திருடிய நபரும் சிக்கினார்
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பயணியிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் தங்கமுத்து (வயது 43). இவர் திருச்சிக்கு பஸ்ஸில் வந்தார். திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் சேலம் பஸ்கள் நிற்கும் இடத்தில் இருந்த போது இவரது பையில் இருந்த செல்போனை பறித்துவிட்டு இருவர் தப்பி ஓடிவிட்டனர். உடனே இவர் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து செல்போன் திருடியதாக இரண்டு பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பாலக்கரையைச் சேர்ந்த சஞ்சீவி, மிளகு பாறை சேர்ந்த பாலமுருகன் என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோன்று திருச்சி இ.பி.ரோடு வேதாத்திரி நகரை சேர்ந்த பிரகாஷ் என்பவரது வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது இரண்டு மொபைல் போன்களை திருடியதாக திருச்சி சூரஞ்சேரி வடக்கு தாராநல்லூர் சிவா என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.