பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் டாக்டர் ஆர் ஜி ஆனந்த் இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் நிகழ்ச்சியில் பங்கேற்பு
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், திருச்சி நாடாளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளருமான டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் திருச்சி உறையூர் மண்டல் பகுதியில் ஆர்.ஜி.ஆனந்த் உடன் இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம், என்ற தலைப்பில்
சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், வார்டு தலைவர்கள், பயனாளிகள் ஆகியோரை அவர்களது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்து, அவர்களது கட்சி பணியை பாராட்டி பொன்னாடை போர்த்தி கவுரவித்து, ஊக்கப்படுத்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.