திருச்சியில் கள்ளக்காதலி வீட்டில் மிணமாக கிடந்த பெயிண்டர். போலீசார் விசாரணை.
திருச்சி பொன்னகர் புது செல்வ நகர் திருவள்ளுவர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் ராஜா (வயது 50). பெயிண்டிங் தொழிலாளி .
இதய நோயாளியான இவர் அதற்காக சிகிச்சையும் பெற்று வருகிறார்.
இந்நிலையில் திருச்சி கீழப்புதூர் பகுதியில் உள்ள பெண் ஒருவருடன் டேவிட் ராஜாவுக்கு தொடர்பு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று டேவிட் ராஜா தொடர்பு வைத்திருந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று தங்கினார். அப்போது இவருக்கு சிலர் போன் அடித்துள்ளனர். ஆனால் அவர் எடுக்கவில்லை. பின்னர் வந்து பார்த்தபோது அவர் கள்ள காதலியின் வீட்டில் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து அவரது மனைவி மெட்டிலிடா மேரி அளித்த புகாரின் அடிப்படையில் பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.