திருச்சியில் இன்று மாலை நடைபெற உள்ள இளைஞர் பாசறை பயிற்சி கூட்டத்தில் திரளாக பங்கேற்க மாவட்டச் செயலாளர் சீனிவாசன் அழைப்பு .
திருச்சியில் அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம்.
மாவட்டச் செயலாளர் சீனிவாசன் அறிக்கை.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக இளைஞர், இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று மாலை நடக்கிறது.இதில் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு மாவட்ட செயலாளர் சீனிவாசன் அழைப்பு விடுத்துள்ளார்.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக.இளைஞர். இளம் பெண்கள் பாசறை சார்பில் பாராளுமன்ற தேர்தலை நோக்கி பாசறை என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி பட்டறை திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள சீனிவாசா மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் .மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.பி.பி.பரமசிவம், திருச்சி மாநகர மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் துணை மேருமான சீனிவாசன், கழக அமைப்பு செயலாளர் டி.ரத்தினவேல் ஆகியோர் சிறப்புரை யாற்றுகிறார்கள். இதில் மாவட்ட, பகுதி வட்ட நிர்வாகிகள், அணி செயலாளர்கள், தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.