Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகர ஆணையராக வி. சரவணன் நியமனம் . தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு.

0

'- Advertisement -

 

8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. திருச்சி, நாகர்கோவிலுக்கு புதிய கமிஷனர்கள்.. தமிழக அரசு அதிரடி.

சென்னை: 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில மனித உரிமைகள் ஆணைய செயலாளராக ஏ.சுகந்தி ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை நிர்வாக காரணங்களுக்காக தமிழக அரசு அவ்வப்போது பணியிட மாற்றம் செய்வது வழக்கம். அந்த வகையில் இன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.

திருச்சி மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த வைத்திநாதன் ஐஏஎஸ் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் இயக்குநராக அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டார். திருச்சி மாநகராட்சி ஆணையர் பதவி காலியாக இருந்த நிலையில், அந்த பதவிக்கு தமிழ்நாடு குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் இணை மேலாண் இயக்குநராகப் பணியாற்றி வந்த வி.சரவணன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் ஐஏஎஸ் மாற்றப்பட்டு, நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய ஆணையராக நிஷாந்த் கிருஷ்ணா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளின் லிஸ்ட்:

1. உள்துறை, கலால் வரித் துறை சிறப்பு செயலாளராகப் பணியாற்றி வந்த ஏ.சுகந்தி ஐஏஎஸ், மாநில மனித உரிமைகள் ஆணைய செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

2. நில சீர்திருத்த துறை இணை ஆணையர் ஆகப் பணியாற்றி வந்த எஸ்.பி.அம்ரித் ஐஏஎஸ், உள்துறை, கலால் வரித் துறை சிறப்பு செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

3. ராமநாதபுரம் மாவட்ட நகர்ப்புற மேம்பாடு ஏஜென்சியின் கூடுதல் ஆட்சியர் பி.ரத்தினசாமி ஐஏஎஸ், வர்த்தக வரித்துறை இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

4. தமிழ்நாடு குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் இணை மேலாண் இயக்குநர் வி.சரவணன் ஐஏஎஸ், திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

5. நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் ஐஏஎஸ், தமிழ்நாடு குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் இணை மேலாண் இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

6. GUIDANCE செயல் இயக்குநர் நிஷாந்த் கிருஷ்ணா ஐஏஎஸ், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

7. தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழக செயல் இயக்குநராகப் பணிபுரிந்து வரும் டாக்டர் வி.ஜெயசந்திர பானு ரெட்டி ஐஏஎஸ், சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையராக (சுகாதாரம்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

8. சென்னை வர்த்தக வரி, இணை ஆணையர் (உளவுத்துறை) வீர் பிரதாப் சிங் ஐஏஎஸ், ராமநாதபுரம் மாவட்ட நகர்ப்புற மேம்பாடு ஏஜென்சியின் கூடுதல் ஆட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.