தந்தை பெரியார் அரசு கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் துவக்கி வைத்தார்.
பாரதிதாசன் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் வழிகாட்டுதல்படி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் திருச்சி மாவட்ட கிளை, பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம் மற்றும் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் தந்தை பெரியார் அரசு கல்லூரியில் நடைபெற்றது.
இந்த இரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் பேராசிரியர் சீனிவாசராகவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து இரத்ததானம் செய்வதால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்வில் பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெற்றிவேல் ரத்ததானம் செய்வதின் அவசியம் பற்றி சிறப்புரையாற்றினார். இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் செயலாளரும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் திருச்சி மாவட்ட கிளையின் தலைவருமான இன்ஜினியர் ராஜசேகர் இரத்ததானம் செய்வதன் மூலம் யாருக்கெல்லாம் அந்த ரத்தம் பயன் பெறும் எப்படி எல்லாம் உயிர்களை காப்பாற்ற முடியும் என்று மாணவ மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.
தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர். விஜயலட்சுமி தலைமை தாங்கி தலைமையுறை ஆற்றினர். இந்த நிகழ்வில் கல்லூரியின் பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்த இரத்ததான முகாமானது திருச்சி மாவட்ட ரத்த வங்கி அலுவலர் மருத்துவர் அனிதா மற்றும் ஆலோசகர் பாலச்சந்தர் ஆகியோரின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த முகாமை திருச்சி மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளரும் மற்றும் தந்தை பெரியார் அரசு கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் முனைவர் குணசேகரன் சிறப்பாக ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்தார்.
இந்த மாபெரும் இரத்ததான முகாமில் தந்தை பெரியார் அரசு கல்லூரியின் 50 மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் இரத்ததானம் செய்தனர்.