Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அகழ் கலை இலக்கிய மன்றம் சார்பில் திருக்குறள் கதைகள் புத்தகத் திறனாய்வு விழா திருச்சியில் நடைபெற்றது

0

 

அகழ் கலை இலக்கிய அமைப்பின் சார்பாக முன்னெடுக்கப்பட்ட 1330 குறட்பாக்களுக்கும், 1330 கதைகளை, 133 எழுத்தாளர்களைக் கொண்டு உருவாக்கி, அதனைக் கொண்டு 7 அடி உயர புத்தகத்தினை உருவாக்கிய திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த, திருக்குறளுக்கு கதைகள் எழுதிய எழுத்தாளர்களின், புத்தகத் திறனாய்வு நிகழ்வின் முதல் பகுதி நடைபெற்றது.

மொத்தம் 13 எழுத்தாளர்கள் இருக்கும் நிலையில், முதற்கட்டமாக 7 பேருக்கான திறனாய்வு மட்டும் நடைபெற்றது.

வரலாற்று புகழ் பெற்ற, திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது, பெரும் சிறப்பு.

அகழ் செயலாளர் சுதா வரவேற்புரையில், அகழின் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் பிரகதி அவர்களின் தொகுப்பில்,

அகழ் நிறுவனர் செ.வினோதினி அவர்களின் தலைமையில்,

திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கத்தின் அமைச்சர் உதயகுமார் மற்றும் பனானா லீப் நிறுவனத்தின் நிறுவனர் மனோகரன் முன்னிலையில்,

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் குறிஞ்சி வேந்தன் சிறப்பு வருகையில்,

திருச்சி நூலக வாசகர் வட்டத்தின் தலைவர், கோவிந்தசாமி வாழ்த்துரையில்,

எழுத்தாளர்கள், திருவள்ளுவர் , தனலட்சுமி, நிர்மலா குமார், பகவத் கீதா, செல்வநாயகம், கவிதா இராஜேந்திரன், ரூபி அனன்சியா போன்றோரின் புத்தகங்களை,

பேச்சாளர்களான, முத்துமாறன், ஜெயலட்சுமி, பறம்புநடராசன், ஜனனி அந்தோனிராஜ், நடராஜன், காருண்யா போன்றோர் திறனாய்வு செய்தனர்.

பெரம்பலூர் தேவராஜ் மருத்துவமனை மருத்துவர் புவனேஸ்வரி அவர்கள் மற்றும் தொழில் முனைவோர் பாமா அவர்களும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.