திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கை பார்க்கிங் இடமாக மாற்றிய அவலம் . நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம் ? வழக்கறிஞர் கிஷோர் குமார் .
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் பார்கிங் இடமாக மாறிய கொடுமை.
இது குறித்து திருச்சி மக்கள் நீதி மய்யம் தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உடலினை உறுதி செய்ய ஓடியாடி விளையாட வேண்டிய விளையாட்டு மைதானங்கள் இன்று திருச்சி மாநகரில் பூங்காக்களாக சுறுங்கிவிட்டன. மேலும் திருச்சி மாநகரில் உள்ள ஒரு சில மைதானங்களில் திருச்சி அண்ணா ஸ்டேடியம் முதன்மையானது.
ஆனால் இந்த அண்ணா ஸ்டேடியத்தின் நிர்வாக அலட்சியத்தால் பல தனியார் அமைப்புகளும் “மாரத்தான்” நடத்துகிறோம் என விளம்பரத்திற்காக முன்பதிவு செய்து கொண்டு மைதானத்தையே நாசமாக்கி வருவது இன்றும் தொடர்கிறது.
இன்று (11.02.2024)ந் தேதி காலை திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் மாரத்தான் நடத்தப்பட்ட பொழுது மேற்படி அண்ணா ஸ்டேடியத்தில் கூடைபந்து மைதானம் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் பார்கிங்காக மாறியுள்ளது கொடுமை. இதனால் கூடைபந்து பயிற்சிக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர். இவையனைத்துமே அண்ணா ஸ்டேடியத்தை நிர்வகிக்கும் நிர்வாகத்தின் அலட்சியம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் இதே போன்று பல்வேறு இடங்களிலும் வாகனங்கள் மைதானத்தில் நிறுத்தப்பட்டதால் மைதானத்தின் வெளிப்புறமும் மிகவும் சேதமடைந்துள்ளது குறிப்பிடதக்கது. இதனால் அன்றாடம் பயிற்சியில் ஈடுபடும் மாணவ, மாணவியருக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே திருச்சி மாவட்ட நிர்வாகமும், மாநகர காவல் துயும், அண்ணா ஸ்டேடிய நிர்வாகமும் இது போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகளின் பொழுது முன்னெச்சரிக்கையாக வாகனங்களை நிறுத்தும் இடமாக ஸ்டேடியத்தை பயன்படுத்துவதை தடுப்பதோடு, தொடர்ந்து மைதானம் சேதமடைவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
என வக்கீல்.Ra.கிஷோர்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.