திருச்சியில் பொன்மலை ரயில்வே உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் கோல்டன் அதலடிக் கிளப் இணைந்து நடத்திய மாரத்தான் போட்டி.
பொன்மலை ரயில்வே உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் கோல்டன் தடகள சங்கம் (கோல்டன் அத்லெடிக் கிளப்) இணைந்து திருச்சி பொன்மலையில் ஜுனியர்த்தான் மாரத்தான் ஒட்டம் பொன்மலை G கார்னர் மற்றும் அண்ணா விளையாட்டு அரங்கத்திலும் நடைப்பெற்றது.
01-04 , 05-07, 08-12, 13-16, 17-21, 23-30, 30+ என வயதிகாக பிரித்து 5 கி.மீட்டர், 3 கி.மீட்டர், 1.கி.மீட்டர், 100 மீட்டர் , 50 மீட்டர் என பிரித்து முதல் முன்று பேருக்கு சான்றிதழ் , ரொக்கம், மொடல் வழங்கப்பட்டது , இந்த நிகழ்வில் சுமார் 3600 மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
அனைவருக்கும் மொடல் , பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு
ரயில்வே அதிகாரி M.ஹரிகுமார்
தமிழக காவல்துறை அதிகாரி M.ஆனந்தன்,
பனானா லீப் உரிமையாளர் மனோகரன், கோல்டன் தடகள சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன், சுரேஷ் பாபு, மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம்
ஆகியோர் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்கள்.
இந்த நிகழ்வில் கோல்டன் தடகள சங்க நிர்வாகிகள் கனகராஜ், ரமேஷ், முஸ்தபா, ஆரோக்கியம், திருச்சி மாவட்ட தடகள சங்க நிர்வாகிகள் ரவிசங்கர், மனோகரன், காணிக்கை இருதயராஜ், ஹரி ராமசந்திரன், மற்றும் பலர் கலந்துக் கொண்டார்கள்.