Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் லால் சலாம் திரைப்பட வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்துடன் கூடிய கொடியை சுதர்சன் தலைமையில் அறிமுகம் செய்த ரஜினி ரசிகர்கள்

0

'- Advertisement -

 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் லால் சலாம். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகக்கோப்பை நாயகன் கபில் தேவ் நடிக்கின்றார்கள் என்றபோது படத்தின் மீது எதிர்பார்ப்பு கிளம்பியது.

நிஜத்திலும் நல்ல திறமையான கிரிக்கெட் வீரர்களான விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்கின்றனர் என்றபோது படம் முழுக்க, முழுக்க கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு நகரும் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் கதையில் அதைத் தாண்டி தேவையான கருத்துக்கள் பேசி ரசிகர்களின் கைத்தட்டல்களை பரிசாகப் பெற்றுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

இந்நிலையில், லால் சலாம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.
ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை, தமிழகத்தில் சில திரையரங்குகளில் காலை 9 மணிக்கு வெளியிடபட்டது. அந்த வகையில் திருச்சி மாநகரில் 4 திரையரங்குகளில் இந்த படம் வெளியானது.

திருச்சி மாரிஸ் திரையரங்கில் வழக்கறிஞர் சுதர்சன் தலைமையில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து மேளதாளத்துடன் ரஜினி ரசிகர்கள் லால் சலாம் படத்தை கொண்டாடினர்.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவத்துடனும், சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் என்ற வசனம் பொருத்திய கொடியை உமா கோல்டு கவரிங் அதிபரும் வழக்கறிஞருமான சுதர்சன் தலைமையில் ரஜினி ரசிகர்கள் அறிமுகம் செய்தது அனைவரையும் உற்று நோக்க வைத்தனர்.

இதனை தொடர்ந்து சுதர்சன் கூறும்போது :

தொடக்கம் முதல் க்ளைமேக்ஸ் வரை படம் வலியுறுத்தும் ஒரு மையக் கருத்து மதநல்லிணக்கம். மொய்தீன் பாயாக வரும் சூப்பர் ஸ்டார் தனது சிறப்பான நடிப்பினால் ரசிகர்களை கட்டிப் போடுகின்றார். மொய்தீன் பாய் கதாப்பாத்திரத்தை சிறப்பாகக் கையாண்டது மட்டும் இல்லாமல், தனது ரசிகர்களுக்கும் குட்டி ட்ரீட் கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார்.

கிராமத்துக் கோயில் பூசாரியாக வரும் செந்தில், ஊர் தலைவர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள தம்பி ராமையா ஆகியோர் நம்மை கிராமத்திற்கே அழைத்துச் செல்கின்றனர். இருவருக்கும் கொடுக்கப்படுள்ள வசனங்கள் தியேட்டரில் கைத்தட்டலை அள்ளுகின்றன. விஷ்ணு விஷாலின் காதலியாக வரும் அனந்திகா சனில்குமார் தான் வரும் சில காட்சிகளிலேயே மனம் கவர்கின்றார்.

விவேக் பிரன்னா, தங்கதுரை ஆகியோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாப்பாத்திரத்திற்கு பொருந்திப் போகின்றனர். படம் முழுக்க வரும் விஷ்ணு விஷாலின் நடிப்பு நிறைவைத் தருகின்றது என்றனர். மேலும் படத்தின் இசை, ஒளிப்பதிவு காட்சிகள் அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் படம் மாபெரும் வெற்றியை பெரும் என அவர் தெரிவித்தார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.