மத்திய அரசால் தீர்க்கப்பட வேண்டிய மக்கள் பிரச்சனைகள் குறித்த 25 பக்க அறிக்கையை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிடம் ஒப்படைத்தார் மாவட்ட செயலாளர் குமார் .
அஇஅதிமுக பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க..
நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு உடனான கலந்தாலோசனை கூட்ட நிகழ்வு நேற்று திருச்சி கருமண்டபம் பகுதியில் நடைபெற்றது .
இந்த நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில்
மத்திய அரசு சார்ந்து தீர்க்கப்பட வேண்டிய மக்கள் பிரச்சனைகள் குறித்த 25.பக்கங்கள் கொண்ட அறிக்கையை
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவரும் அதிமுக அமைப்பு செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விஸ்வநாதன் மற்றும் குழுவினரிடம்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் ஒப்படைத்தார்.