வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிணைந்த அதிமுக வெற்றி பெற வேண்டி சின்னம்மா பேரவை ஒத்தக்கடை செந்தில் தலைமையில் சிறப்பு பூஜை ‘
வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிணைந்த அதிமுக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை.
முன்னாள் அதிமுக நிர்வாகியும், சின்னம்மா பேரவை நிறுவன தலைவருமான ஒத்தக்கடை செந்தில் திருச்சி ஜங்ஷன் வழிவிடு வேல் முருகன் கோவிலில் சிறப்பு பிராத்தனை.
திருச்சி ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் ஒத்தக்கடை செந்தில்.
இவர் முன்னாள் அதிமுக நிர்வாகி ஆவார்.
இவர் தற்பொழுது சசிகலா ஆதரவாளராக சின்னம்மா பேரவை ஆரம்பித்து செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று ஒத்தக்கடை செந்தில் தலைமையில் சசிகலா ஆதரவாளர்கள் திருச்சி வழிவிடு வேல்முருகன் கோவிலில் புரட்சித்தாய் சின்னம்மா சசிகலா நீடூடி வாழ வேண்டும் , ஓபிஎஸ், டிடிவி சசிகலாவுடன் சமாதானமான நிலையில் முருக கடவுள் எடப்பாடிக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும் இதனால் அதிமுக ஒன்றிணைய வேண்டும்.
அஇஅதிமுக ஒன்றிணைந்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்:
அதிமுக என்பது ஒரு குடும்பம் குடும்பத்தில் 5,6 பெரும் ஒரே மாதிரி செயல்படுவதில்லை. குடும்பத்தில் ஒருவர் தவறு செய்தால் அவரை வீட்டை விட்டு துரத்துவது இல்லை . நாம் மன்னித்து மீண்டும் குடும்பத்துடன் இணைத்துக் கொள்வது இல்லையா என மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அடிக்கடி கூறுவார்கள் அதே போன்று மீண்டும் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும்,
எடப்பாடி-க்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும் அதிமுக ஒன்றிணைந்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளும் வெற்றி பெற வேண்டும் என்பது அனைத்து அதிமுக தொண்டர்களின் விருப்பம் பொதுமக்களின் விருப்பமும் தான் என கூறினார்.