கடந்த பாராளுமன்ற தேர்தலில் வென்ற பின் நன்றி கூறக் கூட திருச்சி பக்கம் வராதவர் திருநாவுக்கரசர். தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவிடம் திமுகவினர் புகார் .

திருச்சி நாடாளுமன்ற தொகுதியை திமுகவிற்கே ஒதுக்க வேண்டும் என திமுக நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
காங்கிரசைச் சேர்ந்த தற்போதைய எம்.பி திருநாவுக்கரசர் மீது திமுகவினர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஒருங்கிணைப்பு குழு உடனான ஆலோசனையில் மாவட்ட நிர்வாகிகள் இதனை வலியுறுத்தி உள்ளனர்.
திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவிடம் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர். கடந்தமுறை திருநாவுக்கரசர் வென்றபின் திருச்சி பக்கம் நன்றி சொல்ல கூட வரவில்லை என புகார் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் திமுக எடுக்கும் முடிவுக்கு நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என ஒருங்கிணைப்பு குழு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

