Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மாவட்ட அளவிலான வெஸ்ட்ரியன்ஸ் கோப்பைக்கான கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.

0

 

திருச்சி மாவட்டக் கைப்பந்து (Handball) சங்கத்துடன் திருச்சி செயின்ட். ஜான்’ஸ் வெஸ்டரி மேல்நிலை பள்ளி இணைந்து நடத்திய வெஸ்ட்ரியன்ஸ் சுழற்கோப்பைக்கான கைப்பந்து போட்டி நேற்று தொடங்கியது.

15 வயதுக்கு உட்பட்ட மாவட்ட அளவிலான சப் – ஜூனியர் மாணவ மாணவியருக்கான 15 ஆம் ஆண்டு கைப்பந்து போட்டி செயின்ட். ஜான்’ஸ் வெஸ்டரி மேல்நிலை பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

இதனைப் மண்டல முதுநிலை மேலாளர் பி. வேலுமுருகன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் , திருச்சி, டாக்டர்’ வி.ராஜாமன்சிங், செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி சிபிஎஸ்இ பள்ளியின் தாளாளர், மற்றும் திருச்சி மாவட்ட கைப்பந்து சங்கத்தின் தலைவர் அண்ணாலை , துணைத் தலைவர்கள். பி.விக்னேஷ்வரன், எஸ்.கே. ஜெயந்தி ஆகியோர் தொடக்கி வைத்தார்கள்.


இரண்டாம் நாளான இன்று மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் திருச்சி மாவட்ட கைப்பந்து சங்கத்தின், தலைவர் அண்ணாலை, துணைத் தலைவர்கள். பி.விக்னேஷ்வரன், எஸ்.கே. ஜெயந்தி வாழ்த்துரையைக் வழங்கினார்கள் .

சிறப்பு விருந்தினர் திருச்சி மாநகராட்சி கல்வி குழு தலைவரும் 63வது வார்டு கவுன்சிலருமான வி.பொற்கொடி சிறப்புரை ஆற்றி வெற்றிப் பெற்ற அணியினருக்கு வெஸ்ட்ரியன்ஸ் சுழற்கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்கள்.

திருச்சி மாவட்டக் கைப்பந்து சங்கத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர் .

இந்த போட்டியில் 6 மாணவர் அணிகளும்.
6 மாணவி அணிகளும் கலந்து கொண்டனர்.

செயின்ட். ஜான்’ஸ் வெஸ்டரி மேல்நிலை
பள்ளியின் தலைமை ஆசிரியர் ஏ.சைமன் சுகுமார் வரவேற்றார். திருச்சி மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் ஆர்.கருணாகரன் நன்றியுரை வழங்கினார்.


மாணவர் வெற்றி பெற்ற அணியின் விபரம் :
1. முதலிடம் – எஸ்.பி.ஐ.ஓ.ஏ சி.பி.எஸ்.
இ.ம. மேல்நிலைப்பள்ளி, திருச்சி

2. இரண்டாமிடம் – அரசு உயர்நிலைப் பள்ளி கே.கே.நகர் திருச்சி .

3. மூன்றாமிடம் – சான்ட்டா மரியா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி திருச்சி

4. நான்காமிடம் – இராஜாஜி வித்யாலயா சி.பி.எஸ்.இ,பள்ளி, திருச்சி

சிறந்த விளையாட்டு வீரர் – R. K.ALDERICK (எஸ்.பி.ஐ.ஓ.ஏ சி.பி.எஸ்.இ. பள்ளி, திருச்சி)

சிறந்த கோல்கீப்பர் – P. JEBARAJ (அரசு உயர்நிலைப் பள்ளி கே.கே.நகர்)

நம்பிக்கை வீரர் – MOHAMED ISHAAQ (அரசு உயர்நிலைப் பள்ளி கே.கே.நகர், திருச்சி)

மாணவிகள் பிரிவில் வெற்றி பெற்ற அணிகள் விபரம் :

1. முதலிடம் – சான்ட்டா மரியா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி திருச்சி

2. இரண்டாமிடம் – எஸ்.பி.ஐ.ஓ.ஏ சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளி, திருச்சி 3. மூன்றாமிடம் – இராஜாஜி வித்யாலயா சி.பி.எஸ்.இ, திருச்சி
4. நான்காமிடம் – காவேரி மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி, திருச்சி
சிறந்த விளையாட்டு வீராங்கனை- V . DHARISANA ( இராஜாஜி வித்யாலயா சி.பி.எஸ்.இ, பள்ளி. திருச்சி)
சிறந்த கோல்கீப்பர் – B. தன்ய தர்ஷினி (சான்ட்டா மரியா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி திருச்சி.

நம்பிக்கை வீராங்கனை
R SHANMIKA (காவேரி மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி, திருச்சி )

Leave A Reply

Your email address will not be published.