அண்ணாவின் 55வது நினைவு நாள்: திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் மௌன ஊர்வலமாக சென்று மரியாதை.
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பாக பேரறிஞர் அண்ணாவின் 55 ஆம் ஆண்டு நினைவு ஊர்வலம்.
மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாநகரக் செயலாளர்
மு.மதிவாணன் முன்னிலையில் பேரறிஞர் அண்ணாவின் 55 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சத்திரம் பேருந்து நிலையம் காமராஜர் திருஉருவசிலையில் இருந்து சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்கு மௌன ஊர்வலமாகச் சென்று பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் மாநில, மாவட்ட மாநகர நிர்வாகிகள் அரங்கநாதன்,
சேகரன், செந்தில், பகுதி செயலாளர் மோகன், மற்றும் பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக முன்னோடிகள் மற்றும் கழக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.