திருச்சி: ஜிம்னாஸ்டிக் பயிற்சி மையத்தில் சகா தோழி உடன் பேசிய கல்லூரி மாணவரை தாக்கிய நபர்கள் மீது வழக்குப் பதிவு .
சக மாணவியிடம் பேசிய கல்லூரி மாணவன் மீது தாக்குதல்
போலீஸ் விசாரணை.
திருச்சி வயலூர் ரோடு ஜின்னா தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது கர்சத் (வயது 20) இவர் கேகே நகரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் தனது நண்பர் ராகுல் என்பவர் உடன் திருச்சி வயலூர் ரோட்டில் உள்ள ஒரு ஜிம்னாஸ்டிக் பயிற்சி மையத்தில் பயிற்சிக்கு செல்வது வழக்கம் .
அதேபோன்று அங்கு பயிற்சிக்கு வந்த மேரி என்ற மாணவியுடன் முகமது அசத் பேசியுள்ளார்.
இதைப் பார்த்து ஆத்திரம் அடைந்த மற்றொரு பயிற்சி மாணவர் எதற்காக அந்த மாணவி இடம் பேசுகிறாய் என கேட்டு தகராறு செய்து பின் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டி, சஞ்சய் மற்றும் சிலரை அழைத்து வந்து அவரை கல் மற்றும் கையால் தாக்கி விட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து முகமது ஹஸ்ஸத் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.