Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இருந்து சென்னைக்கு பஸ் கட்டணம் ரூ.40 உயர்ந்தது . நேற்று முதல் அமுலுக்கு வந்தது .

0

'- Advertisement -

 

சென்னையில் இருந்து கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் நேற்று முதல் கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து மட்டுமே இயக்கப்படுகிறது.

கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 710 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 160 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
இந்நிலையில் மாதவரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் (ரூ.40 அதிகம்) செய்யப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களுக்கு பயணம் செய்யும் வடசென்னை மக்களின் வசதிக்காக மாதவரத்தில் இருந்து 160 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் கிளாம்பாக்கத்தில் இருந்து
திருச்சிக்கு ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், மாதவரம்-திருச்சி செல்ல ரூ.390 வசூலிக்கப்படுகிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.