எம்ஜிஆரின் 107 வது பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரம் மற்றும் அன்னதானம் . திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பங்கேற்பு.
எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு
திருச்சியில் அ.ம.மு.க சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பங்கேற்பு.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாளையொட்டி தெருமுனை பிரச்சாரக்கூட்டம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது,
திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் முன்னிலையில்,
தில்லை நகர் பகுதி செயலாளர் பன்னீர் பாண்டியன் தலைமையில்,
52-வது வட்ட செயலாளர் ஜான் ஏற்பாட்டில் நடைப பெற்ற இந்நிகழ்வில் தில்லைநகர் பகுதி இணைச்செயலாளர் த கருப்பையா வரவேற்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் ஹேமலதா, பகுதி செயலாளர்கள் கல்நாயக் சதீஷ், வேதாத்திரி பாலு, உமாபதி, வெங்கட்ரமணி, மணிகண்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், இளைஞரணி செயலாளர் நாகநாதர் சிவகுமார், இளம் பெண்கள் பாசறை செயலாளர் நல்லம்மாள், சுமதி, அகிலா, ஆறுமுகம், சாலமன், சந்த்ரு, மற்றும் பகுதி கழக, வட்ட கழக, சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.