சாக்சீடு தொண்டு நிறுவனம் வடுகர் பேட்டை புனித ஜோஸப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண் குழந்தைகள் தினவிழாவை பள்ளி தாளாளர் ஜெனி தலைமையில், பள்ளியின் தலைமை ஆசிரியர் பவுலின் மேரி முன்லையில் கொண்டாடப் பட்டது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக. CWC யின் தலைவர் மோகன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
திருச்சி புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியின் சமூக பணித்துறையின் தலைவர் அனிதா வாழ்த்துரை வழங்கினார்.
DCPO பாதுகாப்பு அலுவலர் ஜெயசித்ரா குழந்தைகளின் அவசர எண் 10 9 8 பற்றியும், குழந்தைகளின் பாதுகாப்பு உரிமைகள் பற்றியும் பேசினார்.
விழாவில் பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பில் கடந்த ஆண்டு முதல் மூன்றுயிடங்களை பிடித்த மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப் பட்டது.
மாணவிகளுக்கு தென்னங்கன்றுகளும் வழங்கப் பட்டது.
இறுதியில் சாக்சீடு இயக்குனர் சகே.பரிமளா நன்றி கூறினார்.