
எடமலைப்பட்டி புதூரில்
காவலாளியை தாக்கிய தொழிலாளி கைது.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் அங்குள்ள ஒரு குடோனில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகர் மாதா கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த சையது பாபு என்கிற தட்டுவண்டி வியாபாரி பாபுவிடம் வாழைத்தார்
வாங்க பணம் கொடுத்துள்ளார்.
ஆனால் அந்த நபர் பணத்தை வாங்கிக்கொண்டு மது அருந்திவிட்டு வாழைத்தார் வாங்கி கொடுக்கவில்லை.
அதைத் தொடர்ந்து கணேசன் அவரிடம் பணத்தை திருப்பி வைக்கப்பட்டுள்ளார் .
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சையது பாபு, கணேசனை கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சையது பாபுவை கைது செய்தனர்.

