Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தொடர் மக்கள் விரதப் போக்கை கடைபிடிக்கும் விடியா திமுக அரசை கண்டித்து மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் .

0

'- Advertisement -

அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம், லால்குடி தெற்கு, வடக்கு ஒன்றிய கழகம், லால்குடி நகரம், பூவாளூர் பேரூர் கழகம் ஆகியவை சார்பில், தொடர் மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கும் விடியா திமுக அரசை கண்டித்து தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார் தலைமையில், திருச்சி லால்குடி ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்,

லால்குடி, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய மூன்று தொகுதிகளுக்குமான தெருமுனை பிரச்சார வாகனத்தை மாவட்ட செயலாளர் குமார் துவக்கி வைத்தார்.

விடியா திமுக அரசை கண்டித்து நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்தில் அதிமுக தலைமைக் கழக பேச்சாளர் தில்லை செல்வம் பேசுகையில் :-

விடியா திமுக தலைமையிலான தமிழக அரசு, பல்வேறு வரி உயர்வு, விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு என தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கும் இந்த விடியா திமுக அரசை வருகின்ற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் தோல்வியடைய செய்து, வீட்டுக்கு அனுப்புவோம் என்றார்.

இக்கூட்டத்தில் திருச்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல தலைவர் சுரேஷ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எம் பாலன், மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் அருண் நேரு, மகளிர் அணி மாவட்ட செயலாளர் செல்வ மேரி ஜார்ஜ், சிறுபான்மை நலப் பிரிவு செயலாளர் டோமினிக் அருள்ராஜ், ஒன்றிய கழகச் செயலாளர் சூப்பர் நடேசன், வழக்கறிஞர் அசோகன், நகரக் கழக செயலாளர் பொன்னி சேகர் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் பங்கேற்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.