திருச்சி வையம்பட்டியில் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம். மாவட்ட செயலாளர் குமார் சிறப்புரை .
அஇஅதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் கே. புதுக்கோட்டை வையம்பட்டியில்
முன்னாள் முதலமைச்சர், டாக்டர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது .
இக்கூட்டத்திற்கு N.சேது
வையம்பட்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் தலைமை வகித்தார்.
கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான M.S.M.ஆனந்தன்,
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார்
உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்கள்.
விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மருங்காபுரி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சந்திரசேகர், மாவட்ட விவசாய அணி பிரிவு செயலாளர் சின்னசாமி, மாவட்ட பொருளாளர் நெட்ஸ்,இளங்கோ மருங்காபுரி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் கண்ணூத்து பொன்னுசாமி, வையம்பட்டி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பழனிச்சாமி, மணப்பாறை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் அன்பரசன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்
மரு.இஸ்மாயில், ஒன்றிய அம்மா பேரு தலைவர் குமரேசன், எத்திராஜ், ADS.ராமச்சந்திரன், மகேந்திரன் ஆறுமுகம்
மற்றும் செயல்வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று சிறப்பித்தார்கள்