Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பிரதமர் மோடி வருகை முன்னிட்டு ஸ்ரீரங்கம் பஞ்சக்கரையில் ஹெலிபேடு அமைக்கும் பணி தீவிரம்.

0

'- Advertisement -

 

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருவரங்கம் பஞ்சக்கரையில் ஹெலிபேடு அமைக்கும் பணி தீவிரம்.

ஜன. 20-ந் தேதி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு ஹெலிகாப்டரில் வரும் பிரதமர் மோடி, மீண்டும் ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் செல்கிறார்.
ஜன. 22ம் தேதி, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. முன்னதாக, பிரதமர் மோடி ஸ்ரீரங்கம், ரமேஸ்வரம் ஆகிய புனித தலங்களில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார்.

அதன்படி, வரும் 20ம் தேதி காலை 10:30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திருச்சி வருகிறார்.

ஏற்கனவே தனி விமான மூலமாக, பிரதமர் திருச்சி வருவதாக இருந்த திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு, நேரடியாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ஹெலிகாப்டரில் வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

சத்திரம் பகுதியில் உள்ள இ.ஆர். பள்ளி மைதானம், கொள்ளிடம் மஞ்சக்கரை பகுதியில் உள்ள திடல் ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், ஏற்கனவே ஜெயலலிதா முதல்வராக இருந்த போது வந்த பஞ்சக்கரை மைதானம் தேர்வு செய்யட்டு உள்ளது. அங்கு ஹெலிபேட் அமைப்பதற்கான முதல் கட்ட பணிகளும் துவங்கி உள்ளது.

பகல் 12:30 மணிக்கு மேல், மீண்டும் ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் செல்கிறார்.
மேலும், பிரதமர் வருகைக்காக ஹெலிபேட் அமைக்கும் கொள்ளிடம் பஞ்சக்கரை பகுதியை, பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு ஹெலிகாப்டர் தளம் அமைக்கும் பணி இன்று திருவரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே உள்ள பஞ்சகரை பகுதியில் நடந்தது.

இதில் ஜேசிபி எந்திரம் மூலம் மாநகராட்சி பணியாளர்கள் அந்தப் பகுதியை சுத்தம் செய்து சமன் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் பிரதமர் மோடி அங்கிருந்து கார் மூலமாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்வதையொட்டி சாலை பகுதிகளில் மராமத்து பணிகள் நடக்கிறது. இந்தப் பணிகளை இன்று மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் பார்வையிட்டார்.
மேலும் ஸ்ரீரங்கம் இன்ஸ்பெக்டர் அரங்கநாதர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.