எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழாவை புறக்கணித்த திருச்சி அதிமுக முக்கிய நிர்வாகிகள். காரணம் மாநகர் மாவட்ட செயலாளர்.
இன்று அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆரின் 107 வது பிறந்த நாள் விழா உலகெங்கிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் கோர்ட் அருகில் உள்ள எம்ஜிஆரின் திருஉருவ சிலைக்கு சில மாதங்களுக்கு முன் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற ஜெ. சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .
இந்த நிகழ்ச்சியில் 10 பகுதி செயலாளர்களில் ஐந்து பேர் கலந்து கொள்ளவில்லை , முக்கிய அணி செயலாளர்களும்,வட்ட செயலாளர்களும் கலந்து கொள்ளவில்லை .
முக்கியமாக அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரத்தினவேல், அவைத் தலைவர் ஐயப்பன் ,பகுதி செயலாளர்கள் பூபதி, சுரேஷ் குப்தா , ஏர்போர்ட் விஜி, நாகநாதர் பாண்டி, வெல்லமண்டி சண்முகம், ஜெயலலிதா பேரவை செயலாளர் கார்த்திகேயன் , கவுன்சிலர் அரவிந்தன், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சிந்தை முத்துக்குமார், சிறுபான்மை அணி பிரிவு செயலாளர் இலியாஸ் வராத பகுதி செயலாளர்கள் பகுதியில் உள்ள வட்ட செயலாளர்கள் என எப்போதும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் அதிமுகவினர் பெரும்பாலானோர் இன்று மிஸ்ஸிங்.
இதற்கு என்ன காரணம் என மூத்த அதிமுக தொண்டர் ஒருவரிடம் விசாரித்த போது :
திருச்சி மாநகரில் பல மாதங்களாக மாநகர் மாவட்ட செயலாளர் பதவி இல்லாமல் இருந்து வந்தது, இதனை கடும் போட்டிக்குப் பின்னர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து அதிமுக திரும்பிய ஜெ. சீனிவாசன் பெற்றார் . பின்னர் தற்போது கடந்த 11.1.24 திருச்சி மாநகர் மாவட்டத்தில் காலியாக இருந்த இடங்களுக்கும், தனக்கு வேண்டியவர்களுக்கும் ( உதாரணமாக ஏற்கனவே அங்கு ஒருவர் வட்ட செயலாளராக பணியாற்றி வந்தாலும் அவர் சரியாக செயல்படவில்லை எனக் கூறி தற்போது அமமுக , திமுக போன்ற மாற்றுக் கட்சியில் இருந்து வந்த நபர்களுக்கு பதவி வழங்கி உள்ளார்) தலைமையில் கூறி பொறுப்புகள் வாங்கினார் .
புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்காக எந்த ஒரு மூத்த நிர்வாகிகளிடமும் ஆலோசைக்கவில்லை என கூறப்படுகிறது .
மாவட்ட செயலாளராக பதவி ஏற்க முன் சாதாரண தொண்டனையும் மதித்து வணக்கம் வைத்து செல்பவர் தற்போது யாரையும் மதித்து வணக்கம் கூட வைப்பது கிடையாது என என மூத்த அதிமுக தொண்டர்கள் கூறுகின்றனர் . மாவட்ட செயலாளர் பதவி வந்த பின்பு தலைகனம் ஏறிவிட்டது எனவும் கூறி புலம்புகின்றனர் .
இன்றய நிகழ்ச்சிக்கு பெரும்பாலானோர் வருகை தர மாட்டார்கள் என்பதை அறிந்த மாவட்ட செயலாளர் கும்பல் கட்டுவதற்காக சுமார் 50க்கு மேற்பட்ட பெண்களை தலைக்கு ரூபாய் 200 கொடுத்து அழைத்து வந்து இருந்தார்.
மாவட்ட செயலாளர் சீனிவாசன் தொடர்ந்து இதே போல் செயல்பட்டால் இனி வரும் நிகழ்ச்சியில் அவரும் அவரால் பொறுப்புகள் பெற்ற நபர்கள் மட்டுமே நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள் என அந்த மூத்த தொண்டர் கூறினார் .
(குறிப்பு:- புதிய நிர்வாகிகள் நியமனம் செய்வதற்கு யார் யார் எத்தனை லட்சம் மாவட்ட செயலாளருக்கு கொடுத்துள்ளனர் என்பதையும் விரைவில் கூறுவதாக கூறியுள்ளார் அந்த மூத்த தொண்டர். விரைவில் ஆதாரத்துடன் நமது தளத்தில் வெளிவரும்)