திருச்சியில் எம்ஜிஆரின் 107 வது பிறந்தநாள்: அமமுக மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்ஜிஆரின் படத்திற்கு மலர் தூவி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் .
அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் ஆணைக்கிணங்க,
தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 107-ம் ஆண்டு பிறந்தநாள் விழாவையொட்டி,
திருச்சி மாநகர் மாவட்டம், உறையூர் பகுதி செயலாளர் கல்நாயக் சதீஷ் அவர்கள் தலைமையில், 24- வது வட்ட அவைத் தலைவர் புத்தூர் ராமன், வட்ட செயலாளர் கலைமணி பாபு அவர்களின் ஏற்பாட்டில்,
மாநகர் மாவட்ட செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன், அவர்கள் எம்ஜிஆரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இவ்விழாவிற்கு மாவட்ட அவைத் தலைவர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
நிர்வாகிகள் துணைச் செயலாளர் தன்சிங், பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, பேரவை மாவட்ட தலைவர் உறையூர் சாமிநாதன்,
மகளிர் அணி சுமதி மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், வட்டச் செயலாளர்கள், வட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.