அண்ணா விளையாட்டு அரங்கில்
திருச்சி மாவட்ட ஜூனியர் தடகள போட்டி
நாளை நடக்கிறது
திருச்சி மாவட்ட இளையோருக்கான தடகள போட்டிகள் மற்றும், 2024- தேசிய அனைத்து மாவட்ட விளையாட்டு போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நாளை நடக்கிறது.
10 12, 14, 16 வயதுக்கு உட்பட்ட மாணவ , மாணவிகள் இதில் கலந்து கொள்ளலாம்.
போட்டியில் பங்கேற்போருக்கு நுழைவு கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும்.
போட்டியில் பங்கேற்போர் விண்ணப்ப படிவங்களை இன்று மாலைக்குள் அண்ணா விளையாட்டு அரங்கில் பெற்றுக் கொள்ளலாம்.
முதலிடம் பெறும் குழுக்களுக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கப்படும்.
சிறந்த போட்டியாளர்கள் அடுத்த மாதம் குஜராத்தில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.