பாலம் சீரமைப்பு பணியின் போதே அமைச்சர் பொய்யாமொழியின் தேர்தல் அறிக்கையான ஜி.கார்னரில் சுரங்கப்பாதை அமைக்கப்படுமா ? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திருச்சி — சென்னை பைபாஸ் சாலையில், சேதமடைந்த பாலத்தை, என்.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.டி., வல்லுனர் குழுவினர் ஆய்வு செய்துள்ளனர்.
இங்கு பொன்மலை ரயில்வே ஸ்டேஷன், ஜீ கார்னர் பகுதியில், இரு மேம்பாலங்கள் உள்ளன.
அதில், திருச்சி – சென்னை மார்க்கத்தில் உள்ள பாலத்தின் ஒரு பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு, கடந்த, 11ம் தேதி இரவு பழுதானது.
நெடுஞ்சாலை துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மண் அரிப்பு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டனர். பாலத்தின் மீதான போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு, பழைய பாலத்தின் வழியாக, இரு மார்க்க போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டது.இதனால் பொங்கல் பண்டிகைக்கு போக்குவரத்து அதிகம் இருப்பதால், சமயபுரம் டோல்கேட்டில் இருந்து, டி.வி.எஸ்., டோல்கேட் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மதுரை, மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் டிப்பர், டிரைலர் லாரி, ஆம்னி பஸ்கள் போன்ற கனரக வாகனங்கள், திண்டுக்கல், வையம்பட்டி, மணப்பாறை, குளித்தலை, முசிறி, துறையூர், பெரம்பலுார் வழியாக திருப்பி விடப்படுகிறது.சென்னையில் இருந்து வரும் கனரக வாகனங்கள், அதே போல் பெரம்பலுார் வழியாக திண்டுக்கல், மதுரை செல்ல வேண்டும். சென்னை, பெரம்பலுார், அரியலுார் பகுதியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் கனரக வாகனங்கள் திருச்சி, பால்பண்ணை, துவாக்குடி மற்றும் புதிய சுற்றுச்சாலை வழியாக செல்ல வேண்டும். கார், பயணியர் பஸ் போன்ற வாகனங்கள் வழக்கமான வழித்தடத்தில் அனுமதிக்கப்படுகின்றன.
மண் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்த பாலத்தை அமைச்சர்கள் நேரு, மகேஷ். போலீஸ் கமிஷனர் ஆகியோர் நேற்று பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
அதிகாரிகள் கூறுகையில், ‘பாலத்தில், மண் அரிப்பு ஏற்பட்ட பகுதியை மட்டும் அப்புறப்படுத்தி விட்டு, புதிதாக மண் கொட்டி, கற்களை அடுக்கி சீரமைக்கலாம் என, திட்டமிடப்பட்டுள்ளது. ‘இரவு, பகலாக பணி செய்து, 30 நாட்களில் முடிக்கப்பட்டு, மீண்டும் வல்லுனர் குழு ஆய்வுக்கு பின், போக்குவரத்து துவங்கப்படும்’ என்றனர்.
இந்த நிலையில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தனது தேர்தல் கூறியது போல் ஜி கார்னரில் சுரங்கப்பாதை அமைக்கப்படும் என கூறியிருந்தார். அதேபோன்று இவ் வார்டு கவுன்சிலர் கொட்டப்பட்டு தர்மராஜ் கூட தனது தேர்தல் வாக்குறுதியின் போது ரயில்வேமனை ஊழியர்கள் பொன்மலை மக்களின் வசதிக்காகவும் ஜிகார்னரில் சுரங்கப்பாதை அமைக்கப்படும் எனக் கூறி இருந்தார் .
இரண்டு ஆண்டுகளாகியும் இது இதைப் பற்றி எந்த பேச்சு வார்த்தையும் இல்லை . . கேட்டார் ரயில்வேயில் அனுமதி வாங்க வேண்டும் அது இது என காரணங்களை கூறி வருகின்றனர். சுரங்கப்பாதை அமைப்பது பற்றி ஆய்வறிக்கை மட்டும் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது .
டிவிஎஸ் டோல்கேட் முதல் ஜி.கார்னர் வரை தினமும் சர்வீஸ் சாலை இல்லாததால் தினமும் சிறு சிறு விபத்துக்கள் நடைபெற்று வருகிறது எனவே பாலம் சரி பார்க்கும் பணி நடைபெறும் இந்த நேரத்தில் சுரங்க பாதை அமைக்கும் பணியையும் தொடங்கி முடித்தால் நன்றாக இருக்கும் என்பதே இப்பகுதி பொதுமக்களின் விருப்பமாகும் .
கிழக்குத் தொகுதியில் உள்ள பழுதடைந்த இந்த பாலத்தை தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதய ராஜ் நேரில் சென்று பார்வையிட கூட இல்லை. இந்த சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு இவர் நடவடிக்கை எடுப்பார் என இவரை நம்புவது வீண் .
தெற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான மகேஷ் பொய்யாமொழி உடனடியாக நடவடிக்கை எடுத்து பொன்மலை ஊழியர்கள், பொன்மலை , பொன்மலைப்பட்டி பகுதி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் துணையாக இருப்பார் என பொதுமக்கள் பெரிதும் நம்பி உள்ளனர் .

