Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மாணவிகள் மற்றும் அவர்களது தாயார்கள் உடனும் …. போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது .

0

'- Advertisement -

 

பெண் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தனியார் பள்ளி உடல்கல்வி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்சிங்
(வயது 32). தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர் பள்ளிக்கு அருகே வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இதே பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு, ஆசை வார்த்தைகள் கூறி சுந்தர்சிங் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் சுந்தர்சிங்கை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். சுந்தர்சிங்கின் செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்த போது அதிர்ச்சி அடைந்தனர்.

அவரது செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்தன. மாணவிகள் உள்பட பல இளம்பெண்களிடம் அவர் பழகி வந்துள்ளார். அவர்களிடம் வீடியோ காலில் பேசி, ஆசை வார்த்தைகள் கூறி மயக்கி ஆடைகளை விலக்கி காட்ட, அதையும் ரகசியமாக
வீடியோ பதிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

உடற்கல்வி ஆசிரியர் என்பதால், பல மாணவிகளுடன் பழக்கம் ஏற்பட்டதுடன், அல்லாமல் அவர்களின் தாயாருடனும் சுந்தர்சிங்கிற்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கணவர் வெளிநாட்டில் இருக்கும் பெண்களை குறி வைத்து அவர்களை தனது வலையில் வீழ்த்துவதற்கான வேலைகளில் சுந்தர்சிங் ஈடுபட்டதும் அவர்களிடம் பணம் பறித்ததும் தெரியவந்துள்ளது. தற்போது இவரது செல்போனை கைப்பற்றி உள்ள போலீசார், அதை சைபர்கிரைம் போலீசாரிடம் கொடுத்துள்ளனர். மேலும் வீடியோக்களில் உள்ள பெண்களிடம் இருந்து ரகசியமாக புகார்களை வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.