டிடிவி தினகரன் பிறந்தநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் கொடைக்கானல் சுற்றுலா செல்ல மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் ஏற்பாடு.
மக்கள்செல்வர் அவர்களின் பிறந்த நாள் விழா பரிசாக “கொடைக்கானல் சுற்றுலா” செல்லும் நிர்வாகிகள்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு,
திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக நடத்தப்பட்ட டிடிவி சுழல் கோப்பையில்
இதய தெய்வம் அம்மா பேரவை செயலாளர் பெஸ்ட் கே.பாபு தலைமையில் விளையாடி முதல் பரிசு பெற்று வென்ற அணி டிடிவி ராகிங் பாய்ஸ் மற்றும் இளைஞர் பாசறை செயலாளர் ஜான்.கென்னடி அவர்கள் தலைமையில் விளையாடி இரண்டாம் பரிசு பெற்ற அணி டிடிவி கிங்ஸ்
ஆகிய இரண்டு அணிகளும் மாநகர் மாவட்ட கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான ப__செந்தில்நாதன் அவர்களிடம் வெற்றி கோப்பையை பெற்றனர்.
முதல் இரண்டு பரிசு பெற்ற அணிகளுக்கு, திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பாக “கொடைக்கானல்” சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார் .